Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இலவச வேட்டி சேலை உற்பத்தி கூலி நிர்ணயம் திருப்தியில்லை: நெசவாளர்கள்

இலவச வேட்டி சேலை உற்பத்தி கூலி நிர்ணயம் திருப்தியில்லை: நெசவாளர்கள்

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக 1.77 கோடி வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்விற்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்த்த கூலி உயர்வு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக 1.77 கோடி வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரூ. 642.88 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள, இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, கைத்தறியில் நெய்யப்படும் சேலைக்கு ரூ. 125.72-ம், வேட்டிக்கு ரூ. 49.99-ம் கூலியாக வழங்கப்படும். விசைத்தறியில் நெய்யப்படும் சேலைக்கு ரூ. 54.81-ம், வேட்டிக்கு ரூ. 23.34-ம் கூலியாக வழங்கப்படவுள்ளது.

இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணியின் மூலம் ஈரோடு, நாமக்கல்,சேலம், வேலூர், ராணிப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் சார்பு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். அரசின் கூலி உயர்வு திருப்தியளிப்பதாக தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர் டிஎஸ்ஏ சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் பா.கந்தவேல் ஆகியோர் கூறும்போது, “ கடந்த செப்டம்பர் மாதம் முதல் இலவச வேட்டி சேலை உற்பத்தியை மேற்கொண்டு வருகிறோம். விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் இலவச வேட்டி சேலை நெசவு கூலி உயர்வு நிர்ணயம் தொடர்பாக எங்கள் கோரிக்கையை ஏற்று, இதற்கென குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையை ஏற்று, காலதாமதமில்லாமல் கூலி உயர்வை தமிழக முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜபேட்டை கைத்தறி நெசவாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தமிழ்மணி கூறுகையில், “கைத்தறிக்கு முன்பு ஒரு சேலைக்கு ரூ.103 கூலியாக வழங்கப்பட்டது. இதனை ரூ. 150 ஆக உயர்த்தி தர வேண்டும் என கேட்டிருந்தோம். இந்த நிலையில் அரசு கூலியை ரூ. 125- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு ஒரு சேலையை கனமான நூலில் 2 மணி நேரத்தில் நெய்து விடுவோம். இப்போது சன்ன ரக நூல் வழங்குவதால், ஒரு சேலை நெய்து முடிக்க 2.30 மணி நேரம் தேவைப்படுகிறது. அது மட்டுமின்றி புடவைகளின் ஓரம் ஜரிகை நெய்ய வேண்டியிருப்பதாலும் கால தாமதம் ஏற்படுகிறது” என்றார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என ஏற்கனவே சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூலி உயர்வும் திருப்தியில்லை என நெசவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூலி உயர்வு விசைத்தறியாளர்களிடம் வரவேற்பையும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது என்கின்றனர் ஜவுளித்துறையினர்.

இதுகுறித்து கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி கூறுகையில், “பொங்கல் பண்டிகைக்கு புதிய வண்ணங்களில், தரமான இலவச வேட்டி சேலை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிலுவைத் தொகையாக இருந்த ரூ. 13 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

முந்தைய செய்தி
6 மாத குழந்தைகளுக்கான உணவுகளில் சர்க்கரை சேர்க்க தடை!
அடுத்த செய்தி
வருகிறது புதிய நடைமுறை! எத்தனால் தயாரிப்பில் மத்திய அரசு அதிரடி!

தொடர்புடைய செய்திகள்